புதன், 16 மார்ச், 2011

சுனாமியின் கேள்விகள்...

சுனாமியின் கேள்விகள்... இந்த சுனாமி ஜப்பானுக்கு மட்டுமல்ல ...உலகம் முழுக்க வாழும் மனிதர்களுக்குத் தன்னுடைய கேள்வி நடனத்தை நிகழ்த்திக் காட்டி,உலகத்தின் தோள்களை உலுக்கிப் பிடித்து தன்னுடைய கேள்விகளை உரக்கக்  கேட்டிருக்கிறது ...புரியாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ,புரிந்தவர்கள் திருந்திக் கொள்ள வேண்டும் ...  
                                                 மனிதன் அறிவின் திமிரால் இயற்கையின் படைப்பை மீறி அதன் இயல்புக்கு மாறாக ,அணு உலை ,ஆழ்துளை ,எங்கு பார்த்தாலும் இரும்புக் கோபுரங்கள் ,சுரங்கப் பாதைகள் ,கதிர் வீச்சுக் கருமாந்திரங்கள் என மெட்டல் மேனியாக்களாகவும் ,செயற்கை மூளை சிற்பிகளாகவும் மாறி மனிதம்  மறந்து திரிகின்ற  வேளையில் ,  ஆக்குவதும் ,அழிப்பதும் என் வேலை என்றிருக்க ...அணு உலை கட்டி அழிவு வேலை செய்ய நீங்கள் யார்? ...உங்கள் ஆயுட் கால அறிவு முழுதும் கொட்டி ஆர்பரித்தாலும் , என் சிறு அசைவுக்கு உன்னால் பதில் சொல்லிட முடியுமா ? என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது ...அமெரிக்காவாகட்டும் ,சீனா வாகட்டும்  இன்னும் உலகின் எந்தப் பெரிய வல்லரசாகட்டும் ...ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் ...நாம் எல்லோருமே பிழைக்க வந்தவர்கள்  ...அதுவும் இயற்கை அனுமதிக்கும் வரை..இதைப் புரிந்து கொண்டால் நாச வேலைகள் மறந்து நேச வலைகள் விரித்திடுவோம் ...           

சனி, 22 ஜனவரி, 2011


அதிர்வுகள் .. .இந்த பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே இடைவிடாத ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது ...அது இனிய அதிர்வுகள் மூலம் நம்மிடையே தொடர்பு கொள்கிறது ...சப்தங்கள் மூலமாக ,மலர்களின் மூலமாக ,வண்ணங்களின் மூலமாக இன்னும்  எதன் மூலமாகவும் ...அதை அதனோடு இணைந்து சரியான அலை வரிசையில் அமைத்துக்கொண்டோமானால் ...ஒரு ரேடியோ அலை வரிசையைக் கேட்பது போன்றே கேட்டு மகிழலாம் ...இந்த நிலை எல்லையற்ற ஆனந்தம் கொண்டது ....